அன்பு நண்பர்களே !
இது ஒரு இலக்கிய விளையாட்டுத் திடல். மனதில் எழும் உணர்ச்சிகளுக்கு இங்கே வடிகால் அமைக்கப்படும். நெஞ்சினில் எழும் ததகங்களுக்கு சாந்தி இங்கே கிடைக்கும்.
——————————————————————————
குறுந்தொகையுடன் ஒரு சிறு விளையாட்டு
அன்பு உள்ளங்களே,
துரு ர்ஹுஎஉவென ஓடியாடி விளையாடும் பருவத்தே ஒரு குழந்தை. ஆர்வத்துடன் காத்திருக்கையில் அதன் கையில் அழகான் வர்ணங்களில் களிமண், முன்னே அழகேயுருவான சிற்பி செதுக்கிய ஒரு சிலை.
கலையேயுருவான அந்தச் சிற்பத்தைக் கண்டதும் அஎதக் குழந்தையின் நெஞ்சில் ஆனந்த வெள்ளம், கையிலுள்ல களிமண்ணைப் பிசைகிறது, அதோ அந்தக் கலையேயுருவான சிற்பம் போலே நானும் ஒரு கலையம்சம் படைக்கின்றேன் ஒரு அற்ப ஆசையில் ஏது களிமண்ணை உருட்டிப் பிசைந்து ஒரு உருவம் செய்கிறது.
பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் ஆக்கிய கதை போன்று.
அதே போலத்தான் குறுந்தொகை எனும் அந்த அற்புத இலக்கியப் புதையலைனுள் என்னைப் புதைத்ததும் எனக்கும் அந்தக் குழந்தையைப் போல ஒரு நப்பாசையில் என் மனதில் உள்ள தமிழை எனது சொற்ப அறிவு என்னும் பரப்புளவுக்குள் பிசைந்து எடுத்து அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஒரு அற்ப சந்தோஷம்.
————————————————————————————————————
காதலில் தோய்ந்து விட்டாள் அந்தக் கரிகை. மாலைப்பொழுது என்பது காதலனைப் பிரிந்த காதலிகளுக்கு ஒரு வேதனையான பொழுதுதானே ! உள்ளம் கவர்ந்த கள்வனை, இதயத் திருடனை எண்ணி உருகும் வேளையல்லவோ அது.
பகல் என்னும் அந்தப் பொழுது முடிந்து விட்டதை எது பறை சாற்றுகிறதாம். மலர்கின்ற முல்லைகள் பகலின் எல்லையைக் கோடிட்டுக் காட்டுகின்றனவாம். தன் அனல் கதிர்களாஅல் பகலை பொசுக்கி விட்டு, கொஞ்சம் சினம் தணிந்த சூரியனின் பின்னே மெதுவாய் வருகின்ரது மாலை என்னும் அந்தப் பொழுது. வந்த மாலைப் பொழுது சும்மாவா இருக்கும்? காதல் நினைவுகளாஅல் நாயகியை வறுத்து எடுத்து விடுகிறதே ! பாவம் அவள் என்ன செய்வாள் ? வழமை போல அவளிஒன் குறை கேட்கும் தோழியைத் தானே நாட முடியும்.
ஏய் தோழி ? எனைக் காதல் கணை கொண்டு தாக்கும் இந்த மாலைப் பொழுதை நான் என்னுயிர் பிரிவதற்குள் கடக்க முடியுமோ? சித்திரவதை தாங்கமுடியவில்லையே ! கடல் வெள்ளம் பெரிது நீந்திக் கடக்க முடியாது என்று சொல்கிறார்கள், பைத்தியக்காரர்கள் இந்த மாலை தொடங்கி காலை வரை நீளும் இரவு வெள்ளம் கடலைவிடப் பெரிது ஏனென்றால் என் காதல் நினைவுகளௌடன் போராடி இதை நீந்திக் கடக்க முடியாதே ! என்கிறாள் அந்த பேதைப்பெண்
இதைக் குறுந்தொகை387, கங்குல வெள்ளத்தார் இப்படிச் சொல்கிறது,
எல்லை கழிய முல்லை மலர
கதிர்சினம் தணிந்த கையறு மாலை
உயிர்வரம்பு ஆக நீந்தினம் ஆயின்
எவன் கொல்? வாழி தோழி!
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே
இதைக் கொஞ்சம் எளிமையாக்கி வார்த்தைகளோடு விளையாட நான் சிந்தித்தேன். விளைவு….. இதோ ! படிக்க வேண்டிய தண்டனை உங்களுக்கு
கேளடி தோழி ! கேளடி தோழி
நானொரு சேதி காதோடு சொல்வேன்
பொசுக்கிடும் கதிரால் ஆதவன் தன்
பொங்கிடும் சினம் தணிக்க
பகலின் முடிவை மலர்ந்திடும் முல்லை
பறைசாற்றும் பொழுதொடு பின்னே
புகுந்திடும் மாலை வேளையில் நானும்
புலர்ந்திடும் காதல் நினைவுகளோடு
போராடும் நேரங்கள்… புரியா மானிடர்
ஆழியின் வெள்ளம் பெரிதே என்பார்
அறியார் அவரும் காதலன் இல்லா
அந்தியும் இரவும் அதைவிடப் பெரிதே
சக்தி
அன்பு நண்பர்களே இது சேய் சமைத்த உணவு, குழந்தை பாடிய தாலாட்டு ரசித்திருந்தால் மகிழ்வேன், குறையிருந்தால் பொறுத்திடுவீர், ஏனெனில் உமக்கு அன்பு மனமுண்டு
அன்புடன்
சக்தி
