கவியரசர் கண்ணதாசன் பக்கம்

காவியத்தாயின் இளையமகன்                                                                                                                                                           காதல் பெண்களின் பெருந்தலைவன்                                                                                                                                                      பாமர ஜாதியில் தனி மனிதன் – நான்                                                                                                                                          படைப்பதினால் என் பெயர் இறைவன்

நான் மானிட ஜாதியை ஆட்டி வைப்பேன் – அவர்                                                                                                                                 மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன்                                                                                                                                         நான் நிரந்தரமானவன் அழிவதில்லை                                                                                                                                                        எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை

கவியரசர் கண்ணதாசன்

____________________________________________________________________________________________________________________________________________________________________________________

  

 கவிஞரின் நினைவுகளில் …..

என்னுள்ளத்திலே அரியணை அமைத்து கோலோச்சிக் கொண்டிருக்கின்ற கவிஞர் கோமகன் கவியரசர் கண்ணதாசனுக்கு சமர்ப்பணமாக இந்தப்பக்கம் அமைகின்றது.உள்ளம் அழும் போது, உணர்வுகள் தீயாய்ச் சுடும்போது, உறவுகள் முள்லாய்க் குத்தும் போது. காதல் இதயத்தைத் தீண்டும் போது, பாசம் இனிமையான கீதத்தை தென்றலாய் வீசும்போது உள்லத்தி எழுவது கவிதையுணர்வுகளே !

உலகம் புரியாத பருவத்திலே ! பொறுப்புக்களை அறியாத காலத்திலே ! நெஞ்சத்தில் கரைபுரண்டோடும் உணர்ச்சிகளை எப்படி வாய்க்காலிட்டு வரம்புக்குள் கொண்டுவருவதென்று தெரிவதில்லை.

அப்படியான காலத்திலே தான் தனது திரைகானமெனும் சாவியெடுத்டு எனது நெஞ்சமெனும் இரும்புக்கதவைத் திறந்தார் கவிஞர். திறந்தது மட்டுமல்ல, துருப்பிடித்து, தூசிபடிந்து கிடந்த பல உதிரத்து துளிகளுக்கு புது உயிர் கொடுத்தார். நாடி, நரம்புகளில் ரத்தத்தோடு சேர்ந்து பாய்ந்த அந்தத் தமிழின் உயிருக்கு ஒரு உருவம் கொடுத்தது கவிஞரின் பாடல்களில் கலந்திருந்த அந்தத் தமிழ் எனும் தெள்ளமுதே.

இது ஓர் ஆரம்பமே ! இங்கு கவிஞர் சம்மந்தப்பட்ட பலவும் பகிரப்படும்.

அன்புடன்
கவியரசரின் தாசன்
சக்தி சக்திதாசன்

 

 

____________________________________________________________________________________________________________________________________________________________________________________

கண்ணதாசனோடு கலந்து விடும் பொழுது
—————————————————————————­—–

கண்ணதாசன் என்னும் கவிதைக் கோமகனின் படைப்புக்களோடு கலந்து விடும்
பொழுதுகள் இனிமையானவை, இளமையானவை, இதமானவை.

சாதாரண எட்டாவது மட்டுமே படித்த இந்தக் கவியரசரின் மனவறையிலிருந்து
எழுந்த படைப்புக்கள் அற்புதமானவை, அளப்பரியன, காலத்தால் அழியாதவை.

தான் படித்தது எட்டாவது மட்டுமே ஆனாலூம், அவர் படிக்காத நூல்களில்லை.
தொல்காப்பியம், கம்பராமாயணம் என்று இந்தக் கவிமகனின் கண்கள் மேயாத
நூல்களில்லை.

தான் படித்து ரசித்தவற்றை அப்படியே தன் மனதினுள் புதைத்து வைத்து விடும்
ஒரு புத்தகப்பூச்சியல்ல இவர். தாம் ரசித்தவற்றை சாதாரணக் கடைமகன் வரை
அனைவரும் ரசிக்க வேண்டும் என்னும் பெருவெண்னத்தோடு அவைகளைத் தனது பாடல்
வரிகளில் எங்காவது கலந்து விடும் அற்புத ஆற்றல் கொண்டிருந்தவர் இவர்.

அத்தகைய அவரின் பகிர்வுகளில் சிலவற்றை புரட்டிப் பார்க்க வேண்டும்
என்னும் எண்னம் என் இதயத்தில் கொழுந்து விட்டெரிகிறது. அவரது இத்தகைய
ஆற்றல்களை ஆராய்ச்சி செய்தவர்களின் நூல்களில் நான் கண்டேடுத்த சில
முத்துக்களை கோர்க்க எண்ணியதன் விளைவே இந்தச் சிறு ஆக்கம்.

சங்க இலக்கியத்தை எடுத்துக் கொண்டோமானால் தொல்காப்பியமானது வாழ்க்கையின்
இலக்கணத்தை அழகாய் வகுத்துக் கொடுக்கிறது.தொல்காப்பியத்தில் கூறப்படாத
விடயங்களே இல்லை என்று சொல்லலாம்.

தொல்காப்பிய இலக்கியத்தில் ஜந்தாவதாகக் கூறப்படும் இயல் “பொருளியல்”

” உண்டா குரிய வல்லாப்
பொருளை உண்டெனப்
போலக் கூறலும் மரபே ” (தொல்காப்பியம்: 1156)

காதலைப் பற்றிப் பாட முயலும் புலவர்கள் எதயாவது உண்ணும் குணத்தையுடைய
பொருளயன்றி, உண்ண முடியாத இயல்பு உடைய பொருளையும் உண்ணுவதாகக் காட்ட
முற்படுவதும் ஏற்றுக்கொளப்படக்கூடியதொன்றேஎன்று பொருள்படும்.

இதற்கு சில உரையாசிரியர்கள் கலித்தொகையில் வரும்,

” பசலையால் உணரப் பட்டுப்
பண்டை நீ ரொழிந்தக் கால் ” என்னும் பாடலை உதாரணமாகக் காட்டுவார்.

அந்தி நேரத்தில் தென்றல் வீசுகிறது. காதலி என்ன செய்கிறாள்? ஜாயோ இந்த
நேரத்தில் என் காதலன் என்னுடன் இல்லையே ! இருந்திருந்தால் இந்த இன்ப
மாலைப்பொழுதை எப்படியெல்லாம் இன்பமாய்க் களித்திருக்கலாம் என்று
ஏங்குகிறாள்.
நாளாந்தம் அவள் அடையும் இந்த ஏக்கத்தினால் அவள் உடல் இளைத்து விடுகிறது.
” என்னடி உன் உடல் இப்படி இளைத்து விட்டதே ! ” என்று கேட்கும்
தோழிகளுக்கு என்ன காரணம் சொல்கிறாளாம் ?

” போங்கடி தென்றல் தான் என்னுடலைத் திண்று விட்டது ” என்று சொல்கிறாளாம்.
ஏன் அப்படி ? பொல்லாத அந்தி வேளைகளில் அந்தத் தென்ரல் வீசுகின்றபடியால்
தானே அவளை காதலன் நினைவு தாக்குகிறது, அப்படியானல் அவளது உடலைத் தென்றல்
தின்றதாகத் தானே கொள்ள வேண்டும்.

தென்றலுக்கு எதையாவது உண்னும் இயல்பு இருக்கிறதா? இல்லையே பின் எப்படி
அது காதலியின் உடலைத் தின்ரதாகக் கொள்ளலாம். கேள்வி எழுகிறது இல்லையா?

அத்ற்குதானே நமது சங்க கால இலக்கியம் தொல்காப்பியம் ஏற்கனவே விடையளித்து
விட்டதே! .

சரி இதை எமது கவியரசர் ஒரு பாடல் வரிகளில் எப்படி புகுத்தியிருக்கிரார்
என்று பார்ப்போம் வாருங்கள் ,

” தென்றலிலே எனதூடல் தேய்ந்தது பாதி – அது
தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி ”

எப்படியிருக்கிறது? கவியரசர் கண்ணதாசனின் கற்பனைத் திறன்…

அன்புடன்
சக்தி
19.09.2008

____________________________________________________________________

கவியரசருக்கு காணிக்கை

ஏதோ உன் நினைவுகள்
என்னெஞ்சைத் துளைக்கின்றன
எத்தனை வகை பாடல்கள்
எமக்கு அள்ளித் தந்தாய்

உன்னைச் சுற்றி ஓடும் என் நினைவுகள்
என்னைச் சுற்றிப் பின்னும் கவிதை வரிகள்
விண்ணை சுற்றிப் பறக்கும் கற்பனை
மண்ணில் இறக்கும் நிஜத்தின் பாரங்கள்

சிறுகூடல் பட்டி இன்று தலைநிமிர்ந்து
சத்தமாய்ச் சொல்லுவதும் கவிஞனே
முத்தையா என்னும் உன் பெயர் தானே
மொத்தமாய் உள்ளங்களைச் சிறையெடுத்தாயே !

தமிழெந்தன் நெஞ்சில் தானாக ஊறும்
தவழ்ந்தோடும் உன் நினைவுகள் தானே
தருகின்றன கவிதை வரிகள்
தமிழ்த்தாயின் மடி தவழ்ந்த தங்கமகனே !

கண்ணதாசன் என்னும் நிகழ்வு
கண்டது தமிழ்நாடு மகிழ்வு
என்றுமே துலங்கிடும் புகழ்வு
என்னெஞ்சில் ஓர் கவிதை புனைவு

கொஞ்சும் தமிழ் கூட்டி
கொஞ்சம் சுவை சேர்த்து
கொடுத்தாய் கவிதைகள் நூறு
கொண்டோம் உன்னையே நெஞ்சில்

தமிழ்த்தாயின் பாதம் பணிந்து
தலைமைக் கவிஞன் உனைத் தொழுது
தமிழ்ப்பா என்னும் மாலைசூட்டி
தருகின்றேன் எந்தன் காணிக்கை

அன்புடன்
சக்தி சக்திதாசன்
____________________________________________________________________

மறுவினைகள்

  1. Thamizh Poonga is very nice. but hw do i type in Tamil to express my views in Tamil itself.
    i too used to write kavithai in my school magazines. hence now i am very interested in ur kavithai

  2. valthukkal

  3. பன்னீர் பூப்போன்ற பார்வையும் – நெற்றிப்
    ப்ரப்பினிலே முத்தான வேர்வையும்
    பினனி வரும் நாணமென்னும் போர்வையும் – சுற்றி
    பின்னலிட்ட கூந்தலெனும் தோகையும் கொண்டு இன்று..


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்: